Thursday, August 19, 2010

நினைவில் உதித்தவைகள்

எல்லாமே மாறிப்போச்சு !
சுயநலமருத்துட்டு
பொது நல மேத்துகிட்டு
அரசியலுக்கு வந்ததெல்லாம் அந்தகாலம்
சும்மா பொதுவாக பேசிகிட்டு
சுயநல மேத்துகிட்டு
வர்றாங்க அரசியலுக்கு இந்த காலம் !
நல்ல பல தொழில் செஞ்சு
நாளும் உழைத்துக்கிட்டு
நாலு பேருக்கு உதவியது அந்தக்காலம்
கலப்படமே தொழிலாக் கொண்டு
நித்தம் நித்தம் ஏமாத்திகிட்டு
நிதர்சனமாய் வாழ்வது இந்தக் காலம் !
தமிழனாக பிறந்தவங்க தமிழே பேசி
வாழ்ந்த தெல்லாம் அந்தக்காலம்
தமிழனாக பிறந்தவங்க
தமிழ் பேச மறுக்குறது இந்தக்காலம்
ஊரெல்லாம் நல்லவங்க அந்தக்காலம்
ஊருக்கு நாலு பேர் இருந்தாப்
போதுங்குறது இந்தக்காலம்
ஓரளவு பொதுநலம் இருந்தது அந்தக்காலம்
சுயநலமே பொதுநலமாய் ஆனது இந்தக்காலம்
இப்படி சொல்லிகிட்டே போகலாம் -
அதுனால என்ன ஆக போகுது
இதோட முடிக்கிறேன்.
பழைய படி எல்லாம் மாறுனா சுகம்.
மனுதம் காக்கப் பட வேண்டும்.
*****