Tuesday, March 1, 2011

நிலை

கண்டதும் கேட்டதும்
கணக்கறியாததும்

தெரிந்ததும் தெளிந்ததும்
தெளிவற்றிராததும்

இம்மையும் மறுமையும்
இன்னவென்றறியாததும்

உண்மையும் பொய்மையும்
உணர்ந்து கொள்ளுமுன்னயும்

சப்தமும் சகலமும்
திரண்ட சாத்திரங்களும்

அண்டமும் பிண்டமும்
அகண்ட பிரம்மாண்டமும்

நாளும் கோளும் நன்மை செய்ய
நால்வகை வேதமும்

முக் காலமும் உணர
மூண்டெழும் மூலாதாரமும்

சுத்த வெளித் தத்துவம்
சுழற்ச்சியும் முறைகளும்

ஏணிப்படிகளாய் மேல்
ஏறுகின்ற நாதமும்

உச்சிவெளி வந்தபின்
உணர்ந்து கொள்ளும் வேதமும்

ஊழ் வினை அறுத்துநிற்கும்
உண்மை பரபிரம்மமும்

தேவரும் மூவரும்
தெளிந்து நின்ற சோதியும்

நாத தத்துவங்களும்
நமசிவாய சாரமும்

அஞ்செழுத்து மந்திரத்தை
ஆழ்ந்து யாசித்த பின்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய்

என்னுள் கலந்து நின்ற
எம்பெருமான் ஈசனே
...